முதலமைச்சர் ஸ்டாலினை அவரது வீட்டில் சென்று சந்தித்து பேசியிருக்கிறார் சிங்கப்பூர் நாட்டு போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரன். இந்தச் சந்திப்பின் போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அவரது முகாம் இல்லத்தில், சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தக தொடர்புத்துறை மந்திரி ஈஸ்வரன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, மாநில நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு, சிங்கப்பூர் நாட்டு துணை தூதர் எட்கர் பாங்க் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் இந்த சந்திப்பு குறித்து தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் போக்குவரத்து மற்றும் வர்த்தக தொடர்பு அமைச்சர் ஈஸ்வரன் அவர்களை சந்தித்தது ஒரு அற்புதமான தருணம். தமிழ்நாட்டிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பண்பாடு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்தினோம் என்று தெரிவித்துள்ளார்.