சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், நாட்டின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
உலகில் மன்னராட்சி அமலில் உள்ள நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. இந்நாட்டின் அரசராக 86 வயதான சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் இருக்கிறார். இவர், இந்தாண்டில் மட்டும் அவர் உடல் நல குறைவால் 2 முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இச்சூழலில் அவரது மகனான பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், நாட்டின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே நாட்டின் துணை பிரதமராகவும், பாதுகாப்பு துறை அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். நாட்டின் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாதுகாப்பு துறையின் இணை அமைச்சராக இருந்த முகமது பின் சல்மானின் இளைய சகோதரர் காலித் பின் சல்மான், பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை சவூதி அரேபிய பத்திரிகை நிறுவனம் உறுதி செய்துள்ளது.