அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான், தங்கள் நாடுகளுக்கிடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொண்டன.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பாதுகாப்புத் துறை மந்திரிகள் இடையே முத்தரப்பு பேச்சுவர்த்தை அமெரிக்காவில் பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பாதுகாப்புத் துறை மந்திரிகள், தங்கள் நாடுகளுக்கிடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பாதுகாப்புத் துறை மந்திரிகளை வரவேற்ற அமெரிக்க பாதுகாப்புத் துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் கூறுகையில், தைவான் ஜலசந்தியில் சீனாவின் அதிகரித்து வரும் ஆக்ரோஷமான மற்றும் மிரட்டும் நடத்தை குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார். ஆஸ்திரேலிய மந்திரி ரிச்சர்ட் மார்லஸ் கூறுகையில், சீனா தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை நாம் இதுவரை கண்டிராத வகையில் வடிவமைக்க முயல்கிறது என்று தெரிவித்தார். மேலும், சீனாவுக்கு எதிராக இணைந்து செயல்பட அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உறுதிமொழி எடுத்துக்கொண்டன.