பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் காவலர் வாகனத்தின் மீது மர்மநபர்கள் நடத்திய தாக்குதலில் 6 போலீசார் கொல்லப்பட்டனர்.
தெற்கு வஜிரிஸ்தானின் எல்லையான லக்கி மார்வாட் மாவட்டத்தில் காவலர் வாகனத்தின் மீது மர்ம நபர்கள் குறிவைத்துத் தாக்கினர். இந்த தாக்குதலில் துணை ஆய்வாளர் மற்றும் 5 காவலர்கள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், தப்பியோடிய ஆசாமிகளைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக மாவட்ட காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா, தாக்குதல் குறித்து மாகாண தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவரிடம் அறிக்கை கோரினார்.
மாகாண முதல்வர் மெஹ்மூத் காணும் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு, கைபர் பக்துன்க்வா காவல்துறைத் தலைவரிடம் உடனடியாக அறிக்கை கோரியுள்ளார்.