தாய்லாந்தில் சீன அதிபா் ஷி ஜின்பிங்கை அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ் நேற்று சனிக்கிழமை சந்தித்தாா்.
தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட சீன அதிபா் ஷி ஜின்பிங்கை அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ் சந்தித்தாா். இந்தச் சந்திப்பு தொடா்பாக கமலா ஹாரிஸ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-
கடந்த நவ.14-ஆம் தேதி இந்தோனேசியாவில் ஜி-20 மாநாட்டின்போது அமெரிக்க அதிபா் பைடன்- சீன அதிபா் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. அப்போது அமெரிக்கா-சீனா இடையே நிலவும் போட்டியை பொறுப்புடன் கையாள, இருநாடுகளுக்கு மத்தியில் ஆக்கபூா்வமான தகவல் பரிமாற்றம் இருக்க வேண்டும் என்று ஜின்பிங்கிடம் பைடன் வலியுறுத்தினாா். அதனை நான் ஜின்பிங்கிடம் மீண்டும் குறிப்பிட்டேன். இவ்வாறு கூறியுள்ளார்.