நமது நாடு அமைதியை குறித்து பேசி வந்தது, ராணுவ பலத்தை மேம்படுத்தவில்லை என கவர்னர் ரவி கூறினார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் சாஸ்திரி பவனில் புதிதாக நிறுவப்பட்ட லால் பகதூர் சாஸ்திரியின் சிலையை கவர்னர் ரவி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியவதாவது:-
லால் பகதூர் சாஸ்திரியை பொறுத்தவரை எளிமைக்கு பெயர் பெற்றவர். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களை சந்தித்தாலும் தனது பொது வாழ்வு கடமையில் தன்னை அர்பணித்தவர். நவீன இந்தியாவை உருவாக்குவதில் அவர் ஆற்றியவர். இந்திய நாட்டுக்காக பல்வேறு பங்களிப்புகளை அளித்த, இந்த தலைவருக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. நமது நாட்டின் தேவைகளுக்கு முதன்மையளித்தவர் இவர். நமது நாட்டின் தேவைகள் தொடர்பாக தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டவர். நமது நாட்டின் மீதான பார்வையில் மாற்றம் கொண்டு வந்தவர் லால் பகதூர் சாஸ்திரி. நமது நாட்டின் தேவை உள்ளிட்டவைகளின் பார்வையில் மாற்றம் கொண்டு வந்தவர்.
லால் பகதூர் சாஸ்திரியின் முழு உருவ சிலையை நிறுவ நடவடிக்கை எடுத்த அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியதும் நமது நாடு அமைதி என்பதை முதன்மையாக கருதியது, அமைதி வழியை கடை பிடித்தால் நம் நாடு பாதுகாப்பனதாக இருக்கும் என கருதினோம். இதனால் நமது நாட்டின் ராணுவத்துக்கு தேவையான விசயங்களை செய்யவில்லை, கருத்தில் கொள்ளவில்லை. அதனால் நாம் பல்வேறு பகுதிகளை இழந்தோம். குறிப்பாக ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளை இழந்தோம். மேலும் எதிரிகள் தொடர்ந்து நமது நாட்டின் பகுதிகளை தொடர்ந்து ஆக்கிரமித்து வந்தனர். நமது நாடு அமைதியை குறித்து பேசி வந்தது, ராணுவ பலத்தை மேம்படுத்தவில்லை.
நமது நாடு 1962-ல் மிகவும் அவமானத்தை சந்தித்து. நமது அணிசேரா கொள்கை மற்றும் அமைதி வழிப்பாதை என்பது நமக்கு தேசிய அளவில் அவமானத்தையே தந்தது. மேலும் அந்த காலக்கட்டத்தில் நமது நாடு தன்னம்பிக்கையை இழந்தது. அந்த காலகட்டத்தில் உணவு தனியத்தின் தரமும் இல்லாத சூழல் ஏற்பட்டது, நமது நாடு நிலை குலைந்து நின்றது. இதனை தொடர்ந்து வந்த லால் பகதூர் சாஸ்திரி அனைத்தையும் மாற்றினார். இவ்வாறு அவர் பேசினார்.