ஸ்காட்லாந்து தனி நாடு கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

ஸ்காட்லாந்தை பிரிப்பது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த கோரி தொடரப்பட்ட வழக்கை லண்டன் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில், வேல்ஸ், ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய பகுதிகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் வடக்கு பகுதியில் உள்ள ஸ்காட்லாந்து 1653ல், இங்கிலாந்துடன் இணைந்து. 1707ல், இப்போதைய, ‘கிரேட் பிரிட்டன்’ எனப்படும் பிரிட்டன் நாடு உருவானது. இதற்கிடையே, ‘பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்தை பிரிக்க வேண்டும்’ என, பல நுாறு ஆண்டுகளாக நிலவி வந்த கோரிக்கையை ஏற்று கடந்த 2013 பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி ஸ்காட்லாந்தை பிரிப்பது தொடர்பாக, கருத்து வாக்கெடுப்பு நடத்த, 2013 டிசம்பரில், மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்தார். அதன்படி 2014- செப்டம்பரில் ஒட்டெடுப்பு நடந்தது. இதில், 55 சதவீத மக்கள் பிரிட்டனுடன் ஒன்றிணைந்து இருக்க முடிவு செய்து, குழப்பத்தை தவிர்த்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் 2013-ல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி வரும் வரும் 2023ல் அக்டோபர் 19-ம் தேதி மீண்டும் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கூறப்பட்டது. இன்று நடந்த விசாரணையில் வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.