அரபிக்கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:-
அரபிக்கடலில் நாளை காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது. கேரளத்தின் வடபகுதியில் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் எந்த பாதிப்பும் இருக்காது. அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி நாளை அந்தமானை நோக்கி நகருகிறது. இதனால், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
