‛தமிழ்நாடு’ பெயரை ஏற்காததால் தான் காமராஜரே தோற்றார்: ஆ.ராசா

தமிழ்நாடு என்ற பெயரை காமராஜர் ஏற்றுக் கொள்ளாதததால் தான் அவருக்கு வீழ்ச்சி தொடங்கியது. அதேபோல் தற்போது தமிழ்நாடு என சொல்ல சிலர் பயப்படுபகிறார்கள். அவர்களுக்கும் வீழ்ச்சி தொடங்கி உள்ளது’ என திமுகவின் துணை பொதுச்செயலாளர் ஆ ராசா கூறினார்.

தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் (கலை பண்பாட்டு இயக்கம்) சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா -இசை சங்கமம் நடந்தது. இதில் திமுகவின் துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ ராசா பங்கேற்று பேசினார். இந்த கூட்டத்தில் ஆ ராசா பேசியதாவது:-

திராவிட மாடல் என்பதை உச்சரிக்க முடியாத உதடுகள் இந்த மண்ணில் இருந்து வெளியே ஓட வேண்டிய காலக்கட்டத்தில், ஓடிய காலக்கட்டத்தில் திராவிட பொங்கல் என்ற தலைப்பில் கவிதை நிகழ்ச்சியை தந்திருப்பது உள்ளபடியே பாராட்டுக்குரியது. மகிழ்ச்சிக்குரியது. திராவிடம் என்றால் தமிழ். தமிழ் திராவிடத்தில் உள்ளது.

காமராஜர் பல அணைகளை கட்டினார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பெயர் வைக்க முடியவில்லையே. அது அவருக்கு மிகப்பெரிய குறைபாடாக போய்விட்டது. காமராஜருக்கு எத்தனையே பெருமைகள் என்பது உண்டு. 6 முறை நாடாளுமன்ற உறுப்பினர். காங்கிரஸ் கட்சியின் தலைவர். 2 பிரதமர்களை உருவாக்கியவர். பல ஜனாதிபதிகளை உருவாக்கியவர். காமராஜர் தமிழ்நாட்டு மக்களை நேசித்தவர். பெரியாருக்கு பச்சை தமிழர் என அடையாளம் கொடுத்தவர். ஆனால் என்ன காரணத்தினாலோ அவர் தமிழ்நாடு என்ற பெயரை ஏற்று கொள்ளவில்லை. அதனால் அவருக்கு வீழ்ச்சி தொடங்கியது. தற்போது தமிழ்நாடு என சொல்ல சிலர் பயப்படுகிறார்கள். அவர்களுக்கும் வீழ்ச்சி தொடங்கி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.