மீனவர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் சுருக்குமடி வலையை பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடல்பகுதியில் கரையில் இருந்து 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி வழங்கக்கோரி மோட்டார் படகு உரிமையாளர்கள், மீனவர்கள் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்டோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றது. விசாரணையின்போது வாதிட்ட விசைப்படகு மீனவர்கள் தரப்பு,மாநில அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டை மடி வலைகளை ஆழ்கடலுக்கு எடுத்துச்செல்ல தங்களுக்கு கடலில் தனிவழி அமைத்துக் கொடுக்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர்.
மீனவர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் சுருக்குமடி வலையை பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. திங்கள்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களில் மட்டும் சுருக்குடி வலைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சுருக்குடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கக் கூடாது என்ற தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டுக்கு தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மீன்பிடி காலம் தொடங்கி விட்டதால் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி கோரி மீனவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். 12 கடல் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி வலைகள் மூலம் மீன்பிடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நாட்டு மீனவர்களுக்கு விசைப்படகு மீனவர்களுக்கு சமமான பலனைப் பெறவே இந்த உத்தரவு என நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர். சுருக்குமடி வலையுடன் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் அடையாள அட்டை வைத்திருப்பது கட்டாயம். சுருக்குமடி வலையுடன் காலை 8 மணிக்கு சென்று விட்டு மாலை 6 மணிக்குள் மீனவர்கள் திரும்பவேண்டும். சுருக்குமடி வலையை பயன்படுத்த பதிவு செய்த படகுகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும். மீனவர்கள் தங்களது படகுகளில் உரிய ட்ராக்கிங் சிஷ்டம் பொருத்தியிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.