முன்னாள் தமிழ்நாடு முதல்வர் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீது வழக்கு போட்டிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து பேஸ்புக்கில் ஜி.கே.வாசன் வெளியிட்டு இருக்கும் பதிவில் கூறியுள்ளதாவது:-
முன்னாள் தமிழ்நாடு முதல்வர் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீது வழக்கு போட்டிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது. முன்னாள் தமிழக முதல்வர், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீது வழக்கு போட்டிருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது. முன்னாள் முதல்வர் அவர்கள் மீதும், அவர்களுக்கு பாதுகாப்புக்கு சென்றவர்கள் மீதும் வழக்கு போடுவது அநாகரிகமானது, நியாயமற்றது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத் தேர்தலுக்கு பிறகு தி.மு.கவின் பல்வேறு சூழ்ச்சிகளையும் தாண்டி அ.தி.மு.க வினுடைய, வளர்ச்சியும், வாக்கு வங்கியும் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவற்றை குலைப்பதற்கான, முறியடிக்க கூடிய முயற்சியாகவே இது தெரிகிறது. இதுபோன்ற செயல்களை தமிழ் மாநில காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.