இலங்கை தமிழர் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு நடவடிக்கை: அண்ணாமலை

இலங்கை தமிழர் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது குறித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இந்தியாவில் இருந்து, சுமார் 200 வருடங்கள் முன்பு இலங்கையில் குடியேறிய மலையகத் தமிழர்களின் வாழ்வாதாரம் முன்னேற, ஒரு வீடு சுமார் 28 லட்ச ரூபாய் மதிப்பில், 4000 வீடுகள் கட்டித் தரும் ஒப்பந்தம் மத்திய அரசு மற்றும் இலங்கை அரசினிடையே கையெழுத்தாகியுள்ளது.

இந்தியாவின் நாகரிக இரட்டை நாடான இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக, பிரதமர் மோடி அவர்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நலத்திட்டப் பணிகளில், இது ஒரு மைல்கல் ஆகும். இலங்கை தமிழர் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.