தமிழ்நாட்டில் கஞ்சா இல்லாத நிலை ஏற்பட வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் கஞ்சா விற்பனைக்கும், பதுக்கலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். காரணம் கஞ்சா விற்கப்படுவதால் அதனை வாங்கி பயன்படுத்தும் இளைஞர்கள், மாணவர்கள், முதியோர் போன்ற பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை சீரழிகிறது. தமிழ்நாட்டில் கஞ்சா இல்லாத நிலை ஏற்பட வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் போன்ற பல்வேறு தரப்பினரின் உடல்நலன், வருங்கால நல்வாழ்வு ஆகியவற்றை மிக முக்கிய கவனத்தில் கொண்டு கஞ்சாவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.