சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் அதிநவீன வசதிகளுடன் ரூ.139 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்ட இந்த மைதானத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ர்.
தமிழ்நாட்டில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் மிகவும் புகழ்பெற்றது. இந்தியாவில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்துக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானம் தான் பழம்பெருமை வாய்ந்ததாக உள்ளது. இங்கு உள்ளூர் கிரிக்கெட் போட்டி முதல் சர்வேதேச போட்டிகள் வரை நடைபெற்று வருகிறது. ஐபிஎல்லில் சேப்பாக்கம் மைதானம் சிஎஸ்கே அணிக்கு ஹோம் கிரவுண்ட்டாக உள்ளது.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் புனரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. கடந்த 2011ல் ரூ.190 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் நடந்த நிலையில் அப்போது புதுப்பிக்கப்படாத பகுதிகள் ரூ.139 கோடியில் புனரமைக்கப்பட்டது. அண்ணா பெவிலியன், எம்சிசி பெவிலியன்கள் புனரமைக்கப்பட்டது. மேலும் புதிதாக ஸ்டாண்ட், அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. இந்த புதிய ஸ்டாண்டிற்கு மறைந்த முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கும், கருணாநிதிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. இந்த மைதானத்தில் நடக்கும் முக்கிய போட்டிகளை கருணாநிதி நேரில் பார்த்துள்ளார். மேலும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் தான் புதுப்பிக்கப்பட்ட சேப்பாக்கம் மைதானத்தின் திறப்பு விழா விழா நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று புனரமைக்கப்பட்ட மைதானத்தை திறந்து வைத்தார். மேலும் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்ட ஸ்டாண்டையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி, சிஎஸ்கே முன்னாள் வீரர் பிராவோ, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி, சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். திறப்பு விழாவை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் புதிதாக அமைக்கப்பட்ட பெவிலியன், ஸ்டாண்ட் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், எம்எஸ் தோனி, பிராவோ உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.
புதுப்பிக்கப்பட்ட இந்த மைதானத்தில் வரும் 22ஆம் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி இதே சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. அந்த போட்டியில் புதிய ஸ்டாண்டுகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் இம்மாத இறுதியில் தொடங்கும் நிலையில், சேப்பாக்கத்தில் புதிய கேலரிக்கள் திறக்கப்பட்டுள்ளதால் வழக்கத்தை விட அதிக ரசிகர்கள் போட்டியை கண்டுகளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு கருணாநிதியின் பெயரில் ஸ்டாண்ட் திறக்கப்பட்டது பற்றியும், எம்எஸ் தோனி பற்றியும் பூரிப்பாக கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பா அவர் தனது டுவிட்டரில் போட்டோக்களுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛கலைஞருக்கு பிடித்த கிரிக்கெட் வீரரான தோனி மற்றும் சீனிவாசன் முன்னிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் அவரது பெயரிலான ஸ்டாண்ட்-ஐ திறந்து வைத்ததில் பெருமை. கிரிக்கெட்டின் தீவிர ரசிகராக இருந்த எங்கள் காவிய தலைவருக்கு தகுந்த அஞ்சலியாக இதை கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார்.