மூன்று நாள் சுற்றுப் பயணமாக, ரஷ்யா சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த துவங்கி, ஓராண்டு மேலாக ஆகியுள்ளது. இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் சுற்றுப் பயணமாக இன்று (மார்ச் 20) ரஷ்யா சென்றார். மாஸ்கோவில் உள்ள விமான நிலையத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைநகர் மாஸ்கோவில் சீன அதிபர் புடினை சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து புடினுக்கு ஜி ஜின்பிங் ஆலோசனைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. புடினுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஜி ஜின்பிங்கின் இந்த மூன்று நாள் பயணம் அமைந்திருப்பதாக பேசப்படுகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மார்ச் 23ம் தேதி நாடு திரும்புகிறார்.
உக்ரைன் போர் விஷயத்தில் சீனா நடுநிலை வகிப்பதாக கூறுகிறது. ஆனால் சீன அரசாங்கம் ரஷியாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் புதினுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஜி ஜின்பிங்கின் இந்த மூன்று நாள் பயணம் அமைந்திருப்பதாக பேசப்படுகிறது. அனைத்து நாடுகளின் இறையாண்மைக்கு மரியாதை அளிப்பது, சீனாவின் 12 அம்ச யோசனை மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.