சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி இழிவாக பேசக்கூடாது: உத்தவ் தாக்கரே!

சாவர்க்கர் எங்களின் கடவுள் அவரை அவதூறாக பேசுவது எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் என்று உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு (வயது 52) குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து அவரது எம்.பி. பதவி அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி மீதான இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், சாவர்க்கர் குறித்து இழிவாக பேசக்கூடாது என்றும் அவ்வாறு பேசுவது எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் என உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார். இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறியிருப்பதாவது:-

அந்தமான் சிறையில் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு பல கொடூரங்களை 14 ஆண்டுகள் சாவர்க்கர் அனுபவித்தார். பாதிப்புகளை நாம் வாசிக்க மட்டுமே செய்கிறேம். அதுவும் ஒருவிதமான தியாகம் தான். சாவர்க்கரை இழிவுபடுத்துவதை சகித்துக்கொள்ள மாட்டோம். சாவர்க்கர் எங்களின் கடவுள். அவரை அவமரியாதை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் போராட தயாராகிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், எங்களின் கடவுளை இழிவுபடுத்துவது என்பது சகித்துக் கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.