அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் கைது!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் கைது செய்யப்பட உள்ளார். ஆபாச படங்களில் நடிக்கும் நாயகி ஒருவருக்கு காசு கொடுத்த விவகாரத்தில் டிரம்ப் கைது செய்யப்படுகிறார்.

2005ல் டிரம்ப் தனது தற்போதைய மனைவி மெலினா டிரம்பை திருமணம் செய்து இருந்தார். 2006லேயே டிரம்ப் கள்ள உறவு வைத்த நிலையில், 2016 அதிபர் தேர்தலுக்கு முன் இதை பற்றி சொல்ல போவதாக ஸ்டோமி டேனியல்ஸ் கூறி இருந்துள்ளார். இதையடுத்து அவரை சரி கட்ட வேண்டும் என்று, அவருக்கு 130000 டாலர் பணம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை நடந்த எதுவும் தவறு கிடையாது. மெலினா டிரம்ப் தனது கணவர் மீது புகார் கொடுக்காத வரை இது எதுவுமே தவறு கிடையாது. ஆனால் இங்கே டிரம்ப் செய்த தவறு என்பது.. அந்த 130000 டாலருக்கு அவர் கணக்கு காட்டியதுதான். அந்த தொகையை தனது லாயருக்கான பீஸ் என்று இவர் கணக்கு காட்டி இருக்கிறார். இது நியூயார்க் சட்டப்படி குற்றம் ஆகும். இங்குதான் டிரம்ப் மாட்டிக்கொண்டு உள்ளார். அதோடு தேர்தல் நேரத்தில் இந்த விவகாரம் வெளியே தெரிய கூடாது என்று காசு கொடுத்து இவர் வாக்காளர்களை ஏமாற்றி உள்ளார். இது இரண்டும்தான் இப்போது அவர் மீது வைக்கப்படும் கிரிமினல் குற்றச்சாட்டு. ஒரு குற்றத்தை மறைக்க கணக்கு வழக்குகளை தவறாக காட்டுவது என்பது ஒரு பெலோனி கிரைம். இதற்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.

இந்த வழக்கில் ஜூரி குழு தற்போது டிரம்ப் குற்றம் செய்வதராக நம்புவதாக குறிப்பிட்டு உள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை நடக்கும் வரை டிரம்ப் ஜெயிலில் இருக்க வேண்டும். அவருக்கு பெயில் கிடைக்காது. இந்த குற்றத்திற்கு பெயில் கிடையாது. ஆனால் டிரம்ப் முன்னாள் அதிபர் என்பதால் சில விதி விலக்கு கொடுக்கப்படும். டிரம்ப் கையில் விலங்கு போட்டு அவரை கைது செய்வார்கள். இதற்காக அவருடைய வக்கீலிடம் பேசிக்கொண்டு இருக்கின்றனர். ப்ளோரிடாவில் இருந்து அவர் நியூயார்க் கொண்டு வரப்பட்டு பின்னர் கைது செய்யபபடடலம்.

அமெரிக்காவின் மான்ஹட்டன் மாவட்ட அட்டர்னி ஆல்வின் பிராக் என்பவர்தான் இந்த விசாரணையை நடத்தி வந்தது. அவர்தான் இந்த விவகாரம் வெளியே வர முக்கிய காரணம் ஆவார். தற்போது இவர் டிரம்ப் வக்கீலை தொடர்பு கொண்டு அவரை சரண் அடைய செய்யும்படி கூறி உள்ளார். இதையடுத்து விரைவில் டிரம்ப் சரண் அடைவார். அதன்பின் கோர்ட்டில் அவரிடம் விசாரணை நடத்தப்படும். இடைக்கால நிவாரணம் கிடைக்காத பட்சத்தில் அவர் சிறை செல்வார். இது போன்ற ஒரு கிரிமினல் வழக்கில் அமெரிக்க அதிபர் அல்லது முன்னாள் அதிபர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இருப்பினும் கைதைத் தவிர்க்க டிரம்ப் தாமாகவே சரணடையலாம் என்றும் கூறப்படுகிறது. அடுத்த வாரம் சரணடைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க முன்னாள் அதிபர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.

முன்னதாக இந்த வழக்கு அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் விசாரணையில் இருந்து வந்தது. அப்போது, டிரம்பின் முன்னாள் வழக்கறிஞரான மைக்கேல் கோஹன் திடீரென இந்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக சாட்சியளித்தார். மேலும் நடிகைக்குப் பணம் வழங்கியதிற்கான ஆதாரத்தையும் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் கைப்பற்றியது. இதனால் டிரம்ப்புக்கு நெருக்கடி வலுத்தது.

கிரினிமல் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் டிரம்ப் ஒன்று சரணடைய வேண்டும் இல்லாவிட்டால் அவரை போலீஸார் கைது செய்வார்கள் என்று தெரிகிறது. டிரம்ப் தற்போது ஃப்ளோரிடா மாகாணத்தில் இருக்கிறார். அவர் இந்த வழக்கின் நிமித்தமாக நியூயார்க் வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கைதைத் தவிர்க்க டிரம்ப் தாமாகவே சரணடையலாம் என்றும் கூறப்படுகிறது. அடுத்த வாரம் சரணடைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்னரே, ஒருவேளை போலீஸாரால் டிரம்ப் கைது செய்யப்பட்டால் அந்த நிகழ்வுகள் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது நினைவுகூரத்தக்கது.

கடந்த 2020 நவம்பர் 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பும் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகளின்போது நீண்ட இழுபறிக்குப் பிறகு ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 306 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். டிரம்புக்கு 232 வாக்குகள் கிடைத்தன. இருப்பினும் தேர்தல் முடிவை ஏற்க மறுத்து டிரம்பின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். டிரம்பின் ஆதரவாளர்கள், நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிட்டோல் கட்டிடத்தை முற்றுகையிட்டனர். அவர்களில் பலர் துப்பாக்கிகளை வைத்திருந்தனர். சிலர், சுவர் வழியாக ஏறி செனட் அவைக்குள் நுழைந்து எம்.பி.க்கள் மீது தாக்குதல் நடத்தினர். இது அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றின் கறுப்பு தினமாக விமர்சிக்கப்பட்டது. அத்தனை வன்முறைகளையும் டிரம்ப் தூண்டிவிட்டதாக வழக்குகள் தொடரப்பட்டன.

அதேபோல் கடந்த 2022 ஆம் ஆண்டு டிரம்ப்பின் ஃப்ளோரிடா வீட்டில் எஃப்பிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறும்போது தன்னுடன் சில ஆவணங்களைக் கொண்டு சென்றதாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடைபெற்றது. அமெரிக்க முன்னாள் அதிபர் வீட்டில் எஃப்பிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியது அதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.