பாகிஸ்தான் மக்களிடையே சந்தோசமில்லை: மோகன் பகவத்

இந்தியாவிலிருந்து பிரிந்த சென்ற, பாகிஸ்தான் மக்களிடையே சந்தோசமில்லை என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் போபால் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:-

இந்தியா – பாகிஸ்தான் இடையே பிரிவினை ஏற்பட்டதை பாகிஸ்தான் மக்கள் தவறு என்று கூறுகிறார்கள். இந்தியாவிலிருந்து, கலாச்சாரத்திலிருந்து பிரிந்தவர்கள், மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? இல்லை. இந்தியா வந்தவர்கள் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பாகிஸ்தானில் இருக்கும் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை.
பாரதம் பாகிஸ்தானை தாக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. மற்றவர்கள் மீது தாக்குதல் நடத்த அழைக்கும், கலாச்சாரத்தை, நாங்கள் சார்ந்தவர்கள் அல்ல. ஆனால் தற்காப்புக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் கலாச்சாரதை சார்ந்தவர்கள். 1947 ல் பாரதத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் சந்தோசமாக இருக்கிறார்களா?. இல்லை.அங்கே வலிதான் இருக்கிறது. பிரிவினையின் போது இங்கு வந்த பெரும்பாலான சிந்து சமூகத்தினர் சமூகம் செழுமையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.