தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி மிக வலிமையாக இருக்கிறது என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள பிஜேபி அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் குறித்து இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுள்ளது. அதில், கலந்து கொண்ட ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒன்றிய அரசு ரயில்வே துறைக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பல திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அதிமுக – பாஜக இடையிலான கூட்டணி வலுவாக உள்ளது. அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த பிரச்சினையுமில்லை, கூட்டணி தொடர்கிறது. கூட்டணி குறித்து நிர்வாகிகள் மத்தியில் அண்ணாமலை பேசியதில் எந்த சர்ச்சையும் இல்லை. தமிழகத்தில் 9 தொகுதிகளை அடையாளம் கண்டு பாரளுமன்ற தேர்தலில் வெற்றி பெற திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக தென்சென்னையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தலைமை அறிவுரை செய்துள்ளது. குமரி, கோவை, நீலகிரி, நெல்லை, வேலூர், ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம் தொகுதிகளில் அதிக கவனம் தேவை. இவ்வாறு எல்.முருகன் கூறியுள்ளார்.