இந்திய நாடு அதிகம் ஏற்றுமதி செய்வது மாட்டுக்கறிதான்: சீமான்!

பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என எல்லாரும் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள். இந்திய நாடு அதிகம் ஏற்றுமதி செய்வது மாட்டுக்கறிதான். இஸ்லாமிய கிறிஸ்தவ நாடுகளுக்கு தான் ஏற்றுமதி செய்கிறது. நான் மாட்டுக்கறி சாப்பிடுவேன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முந்திரிக்காடு திரைப்படம் ஒரு திரை இலக்கியம். மானுட சிந்தனைக்குள் இருக்கிற சாதிய ஏற்ற தாழ்வு உயர்வு தாழ்வு என்கிற சாதிய இழுக்கு போகவில்லை. அதை இந்த படம் வந்து வலுவாக சாடுகிறது. பார்க்கும் அனைவருக்கும் இந்த படம் ஒரு வலியை தரும். ஒரு தலைமுறை பாரத்து வந்து இந்த சாதிய சிந்தனை எனும் உளவியல் நோயில் இருந்து விடுபடுவார்கள் என்று நம்புகிறேன். அதற்கு இந்த படம் வழிவகுக்கும் என நம்புகிறேன். இந்த படத்தில் நானும் பங்கேற்று நடித்து இருக்கிறேன் என்பதில் எனக்கு பெருமையும் மகிழ்ச்சி. நாங்கள் நிறைய எடுத்தோம். அதில் தணிக்கையில் நிறைய போய்விட்டது. சும்மாவே.. இந்த ஆள் பேசுவான்.. இதில் படத்தில் வேற பேச வச்சிருக்கீங்களா.. என்பதுதான் பிரச்சினை.

நாகரீகம் அடைந்த நாடுகளில் முதன்மையான உணவு என்ன? பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என எல்லாரும் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள். இந்திய நாடு அதிகம் ஏற்றுமதி செய்வது மாட்டுக்கறிதான். இஸ்லாமிய கிறிஸ்தவ நாடுகளுக்கு தான் ஏற்றுமதி செய்கிறது. நான் மாட்டுக்கறி சாப்பிடுவேன். நான் நகர்புறத்திற்கு வந்த பிறகு மாட்டுக்கறி எடுக்கிறேன். அது விலை குறைந்த உணவு.. ஊட்டமான உணவு. இங்கே எல்லாரும் தான் சாப்பிடுகிறார்கள். உழைக்கும் மகக்ளுக்கு அதிகம் வலுவை சேர்க்கிற உணவு. இங்கே எல்லாரும் தான் சாப்பிடுகிறார்கள். கேரளாவில் அனைவரும் சாப்பிடுகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள்தான் ஒடுக்கப்பட்ட மக்கள்தான் சாப்பிடுக்கிற உணவு என்று சொல்லக்கூடாது. ஆடு, கோழி சாப்பிடுவீங்க.. அவ்வளவு பெரிய மாடு சாப்பிட மாட்டீங்களா..

இட ஒதுக்கீடு வந்தது பொருளாதர அளவு கோலுக்காக இல்லை. பொருளாதார அளவு என்பது ஏற்றத்தாழ்வுக்குரியது.. மாறிக்கொள்ளக் கூடியது. இளையராஜாவை விட இன்று நான் ஏழையாக இருக்கிறேன் என்றால் ஒரு 10 ஆண்டுகளில் அம்பானி அதானியாக மாற முடியும். ஆனால் இன்றைக்கு பறையானாக இருக்கிறவர் எவ்வளவு பெரிய பணக்காரர் ஆனாலும் அந்த பறையன் தான். இளையராஜாவை விட புகழ்பெற்ற ஈடு இணையற்றை இசை மேதை இந்த நாட்டில் உண்டா.. உலக அளவில் எண்ணினால் 10 பேரில் இரண்டவது மூன்றாவது இருப்பார். ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்.. தலித்திற்கு கொடுத்தோம் என்கிறீர்கள். அவருக்கு ராஜ்யசபா பதவி கொடுக்கும் போது ஈடு இணையற்ற இசைக்கலைஞருக்கு கொடுத்தோம் என்று சொல்லவில்லை.. ஒரு தலித்திற்கு கொடுத்தோம் என்கிறீர்கள். இவ்வளவு உயரத்திற்கு வந்த பிறகும் சாதிய இழிவு ஒழியவில்லை என்றால் அதை எந்த செருப்பை வைத்து அடிப்பது.. அப்போ நீங்கள் யோசித்து பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.