அம்பேத்கர் அரசியல் சட்டத்தை மட்டும் உருவாக்கவில்லை: தமிழிசை சவுந்தரராஜன்

மரியாதைக்குரிய அம்பேத்கர் அரசியல் சட்டத்தை மட்டும் உருவாக்கவில்லை. இந்த நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையை உருவாக்கி வைத்து இருக்கிறார் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மரியாதைக்குரிய அம்பேத்கர் அரசியல் சட்டத்தை மட்டும் உருவாக்கவில்லை. இந்த நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையை உருவாக்கி வைத்து இருக்கிறார். நாட்டின் வளர்ச்சி, எப்படி கல்வி இருக்க வேண்டும். எப்படி சமூக நீதி கடைபிடிக்கப்பட வேண்டும். எப்படி நீர்மேலாண்மை இருக்க வேண்டும். எப்படி தொழிலாளர் நல சட்டம் இருக்க வேண்டும். எப்படி கல்வித்துறை இருக்க வேண்டும்..என ஒரு பன்முகத்தன்மை கொண்ட தலைவராக இருந்து இருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருக்க பார்க்கிறார்கள் என்பதுதான் அனைவருக்குமான கவலையாக உள்ளது. அம்பேத்கர் கனவுகளை பிரதமர் மோடி பன்முகத்தனையோடு நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார். அம்பேத்கர் என்ன நினைத்தாரே அந்த கனவை பிரதமர் மோடி நனவாக்கி கொண்டு இருக்கிறார் என்பதை நான் தெளிவாக சொல்ல முடியும்.

தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் ஆளுநருக்கு எதிராக பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வராக அவர் கடிதம் எழுதட்டும். ஆளுநராக இதில் பார்ப்பதற்கு எதுவும் இல்லை. என்னை பொறுத்தவரை அரசியல் அமைப்பு சட்டம் ஏற்கனவே எழுதப்பட்டு சில குறிப்புகளை கொடுத்து இருக்கிறது. பிரச்சினைகள் என்று வரும் அவர்களும் ஆளுநரிடம் கொண்டு பல கோரிக்கைகளை வைத்து இருக்கிறார்கள். ஆளும் கட்சி ஒரு கோரிக்கை வைக்கிறார்கள். அதே நேரத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் மக்களும் ஒரு கோரிக்கை வைக்கிறார்கள். அந்த கோரிக்கையை வைக்கும் போது அதையும் பரிசீலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சில நேரங்களில் சில சட்டங்கள் காலதாமதம் ஆக்கப்பட்டது எனது கருத்து. நான் இங்கே (தமிழ்நாடு) உள்ளதை பற்றி சொல்லவில்லை.

என்னைப் பொறுத்தவரை ஆளுநர்களை நீங்கள் ரொம்ப குறைவாக மதிப்பிட்டு பேசுவது நல்லதல்ல.. மக்களால் தேர்வு செய்யப்படாத பிரதமரையே 10 வருடம் வைத்து இருந்தீர்கள் நீங்க.. அதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான்.. என்று சில கருத்துக்களை சொல்வது நல்லதல்ல.. ஆளுநர்களுக்கு என்று தகுதி இருக்கிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மக்களால் தேர்வு செய்யப்படவில்லையென்றாலும் அவர் பிரதமராக இருந்தார் என்றால் அவருக்கென்று சில தகுதிகள் இருந்தது. அவர் பொருளாதார நிபுணர்.. அதேபோல ஆளுநர்களும் சில தகுதியின் அடிப்படையில் தான் அவர்கள் அமர்த்தப்படுகிறார்கள். கருத்து வேறுபாடு வரலாம். ஆனால் கருத்து வேறுபாடுகள் குத்திக் கிழிக்கும் அளவுக்கு வார்த்தைகளாக இல்லாமல் ஒரு சகோதரத்துவத்தோடு வார்த்தைகளாக பரிமாறினால் நல்லது என்பது எனது தாழ்மையான கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.