மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் அரசு விரைவில் கவிழ்ந்து விடும். பாஜகவைச் சேர்ந்தவர்தான் மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வர் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
மேற்கு வங்கம், பிர்பூம் மாவட்டம் சூரியில் பாஜக அலுவலகத்தை அமித் ஷா திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து பிர்பூம் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா மம்தா அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேற்கு வங்கத்தில் மம்தாவின் ஹிட்லர் ஆட்சி நடக்கிறது. மேற்கு வங்க முதல்வராக தனது மருமகனை கொண்டு வரும் கனவில் மம்தா இருக்கிறார். 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகவே மம்தாவின் ஆட்சி கவிழ்ந்து விடும். 2024 நடைபெறும் மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு 35 இடங்களில் வெற்றியை தாருங்கள். ஊழல், பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்க பாஜவை சேர்ந்தவர்தான் மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வராக வருவார். இவ்வாறு அவர் கூறினார்.