தமிழகத்தில் பாஜக உடன் கூட்டணியில் தான் அதிமுக உள்ளது: எடப்பாடி பழனிசாமி!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பின் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக என்பது ஒன்றுதான் என்பதற்கான தெளிவு கிடைத்துவிட்டது என்றும் இனி பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படும் என்றும் தெரிவித்தார்.

2 கோடி உறுப்பினர்களை அதிமுகவில் இணைப்போம் என்று தெரிவித்த அவர், ஒற்றை தலைமை என்று கூற வேண்டாம்; நான் சாதாரண தொண்டன் தான் என்று தெரிவித்தார். எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும் என்று தெரிவித்த அவர், தமிழகத்தில் பாஜக உடன் கூட்டணியில் தான் அதிமுக உள்ளது என்றும் கர்நாடகாவில் எங்கள் அடையாளத்தைக் காட்ட ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம் என்றும் தெரிவித்தார். மேலும் பொதுக்குழுக் கூட்டம் நடந்த சமயத்தில் ஓபிஎஸ் மூலம் திமுக நாடாகத்தை அரங்கேற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.