அமிர்தசரஸ்: காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீஸ் கைது செய்தனர்.
பஞ்சாபைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால் சிங். இவர் ‘அனந்த்புர் கல்சா ஃபவுஜ்’என்ற பெயரில் தீவிரவாத குழுவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்ததாக இவர் மீது புகார் உள்ளது. இந்நிலையில் அவரை கைது செய்ய போலீஸார் முடிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார். கடந்த மார்ச் 18-ம் தேதி முதல் அம்ரித்பால் சிங் பல்வேறு வேடங்களில் சாலை, தெருக்களில் சுற்றித் திரியும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இருப்பினும் அவரை போலீஸாரால் இதுவரை கைது செய்ய இயலவில்லை. வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவரான பால் சிங்கை அவரது சொந்த ஊரான மோகாவில் கைதானார். அமிர்தசரஸில் காவல்நிலையம் சூறையாடப்பட்ட வழக்கில் அம்ரித்பால் சிங் தேடப்பட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
கத்தி, துப்பாக்கி ஏந்திய தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து காவல் நிலையத்தை அம்ரித் பால் சிங் முற்றுகையிட்டார். பதற்றம் ஏற்பட்டதை அடுத்து அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளரை காவல் நிலையத்தில் இருந்து போலீஸ் விடுவித்தது. அம்ரித் பால் சிங்கின் ஆதரவாளர்கள் 78 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மார்ச் 18-ம் தேதி முதல் தேடப்பட்டு வந்த அம்ரித் பால் சிங்கை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்ரித்பால் ஒரு மாத காலமாக பல்வேறு வேடங்களில் தலைமறைவாக இருந்து வந்தார். அம்ரித்பால் சிங் பஞ்சாப் மாநிலத்தின் போலீசாரால் கடந்த ஒரு மாத காலமாக தேடப்பட்டு வந்த நிலையில் இன்று அம்மாநிலத்தின் மோகா போலீசாரிடம் அம்ரித்பால் சிங் சரண் அடைந்தார். அம்ரித்பால் சிங் மோகா போலீசாரிடம் சரண் அடைந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் திப்ருகார் கொண்டு செல்லப்படுவார் என்று தெரிகிறது. அவரது உதவியாளர்கள் 8 பேர் ஏற்கனவே தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அங்கு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.