வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் அனுமதி வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டைச் சேர்ந்த வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்த மாணவர்கள் கொரோனாவால் இந்தியா திரும்பினர். மீண்டும் படிப்பை தொடர முடியவில்லை என குறை கூறுகின்றனர். ஆன்லைன் வகுப்பு காரணமாக, தேசிய மருத்துவ கவுன்சில் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஒரு ஆண்டுக்கு பதிலாக 2 ஆண்டுகள் இன்டர்ன்ஷிப்(பயிற்சி மருத்துவர்) செய்ய வேண்டும். அதற்கான உத்தரவைவும் உச்சநீதிமன்றம் வழங்கிவிட்டது. ஆனால், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில், வெளிநாட்டு மருத்துவம் படித்த தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் இன்டர்ன்ஷிப் செய்ய அனுமதிக்கவில்லை. எனவே ஒன்றிய, மாநில அரசுகள், வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்த மருத்துவ மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப்க்கு அனுமதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.