அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலி காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் மருத்துவமனை தரப்பிலிருந்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.