கொரோனா வைரஸை சீனா பயோ ஆயுதமாக வடிவமைத்தது: வூகான் விஞ்ஞானி!

கொரோனா வைரஸ் நம்மை வைத்துச் செய்துவிட்ட நிலையில், வூகானைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் கொரோனா குறித்தும் சீனாவில் நடவடிக்கை குறித்தும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

உலகையே கடந்த 2019இல் தொடங்கி சில ஆண்டுகள் வைத்துச் செய்தது கொரோனா வைரஸ். சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை வைத்து செய்துவிட்டது. எந்த நாடும் கொரோனாவில் இருந்து தப்ப முடியவில்லை. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளும் கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து நாம் மீண்டு வரவே சில ஆண்டுகள் வரை ஆனது. கொரோனா வைரசுக்கு வேக்சின் கண்டுபிடிக்கப்பட்டு, அது கட்டுக்குள்ளாகவே வந்துவிட்டது. இருப்பினும், கொரோனாவின் தோற்றம் என்பதில் இன்னுமே மர்மமாகவே இருக்கிறது. இதற்கிடையே வூகானில் இருக்கும் ஆய்வாளர் ஒருவர் கொரோனா வைரஸ் குறித்து சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது கொரோனா வைரஸை சீனா பயோ ஆயுதமாக வடிவமைத்ததாகக் கூறிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

சீனாவை சேர்ந்த பிரபல ஆய்வாளர் சாவோ ஷான் என்பவர் இந்த ஷாக் தகவல்களைத் தெரிவித்துள்ளார். சீனா குறித்து நேரடி மற்றும் பல சீக்ரெட் தகவல்களை அம்பலப்படுத்திய சர்வதேச பத்திரிகை சங்கத்தின் உறுப்பினரான ஜெனிபர் ஜெங்க் என்பவருக்கு அளித்த பேட்டியில் சாவோ ஷான் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். வூகான் ஆய்வகத்தில் மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்கள் மத்தியில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா வகையை அடையாளம் காணும் ஆய்வுப் பணியில் தான் ஈடுபட்டதாகச் சாவோ கூறினார்.

வூகான் ஆய்வு மையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்த சாவோ இந்த நேர்காணலில் சில முக்கிய கருத்துகளைக் கூறி அதிர்ச்சியைக் கிளப்பியிருந்தார். 2019ஆம் ஆண்டு நான்ஜிங் நகரில் அவரது மேலதிகாரி, சாவோவுக்கு நான்கு வகையான கொரோனா வைரஸ்கள் வழங்கியுள்ளார். இதில் எந்த டைப் வைரஸ் கொடியது மற்றும் வேகமாகப் பரவுகிறது என்பதைக் கண்டறியுமாறு சாவோவுக்கு அவரது மேலதிகாரி உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அந்த 4 வேரியண்ட்களை மனித ACE2 ஏற்பிகள், வெளவால்கள் மற்றும் குரங்குகளிடம் சாவோ சோதனை செய்துள்ளார். இந்த நேர்கானலில் கொரோனா வைரஸை பயோ ஆயுதம் என்றே சாவோ குறிப்பிடுகிறார். மேலும், 2019ஆம் ஆண்டில் வுஹானில் நடந்த ராணுவ உலக விளையாட்டுப் போட்டிகள் சமயத்தில் தனது சக ஊழியர்கள் பலர் காணாமல் போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஹோட்டல்களுக்கு வைராலஜிஸ்ட்கள் அனுப்பப்பட்டுள்ளனர். ஹெல்த் மற்றும் சுகாதாரம் குறித்த சோதனைக்கு அவர்கள் அனுப்பப்பட்டதாகச் சீனா தெரிவித்திருந்தது. இருப்பினும், சுகாதாரம் குறித்த சோதனைகளை எப்போதும் வைராலஜிஸ்ட்கள் எடுக்க மாட்டார்கள். எனவே, அவர்கள் வைரசைப் பரப்ப அங்கு அனுப்பப்பட்டு இருக்கலாம் என்று சாவோ ஷான் சந்தேகிக்கிறார்.

நியோகோவ் உருமாறவில்லை.. மனிதர்களுக்கு இப்போது பரவாது.. வூகான் விஞ்ஞானிகள் சொன்னது இதுதான். கொரோனா வைரஸ் பாதிப்பு இரண்டு ஆண்டுகளில் உலக நாடுகளுக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இதுவரை உலகெங்கும் பல கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல சுமார் 60 லட்சம் பேரை உலகெங்கும் கொரோனாவால் நாம் இழந்துள்ளோம். சமீப காலங்களில் கொரோனா அளவுக்கு எந்த நோயும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் அது பயோ ஆயுதமாக இருக்கலாம் என்று சீன ஆய்வாளர் சாவோ ஷான் கூறியுள்ளது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.