விவசாயிகளின் குறுவை சாகுபடி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ஜி.கே.வாசன்

கர்நாடக அரசு ஜூன், ஜூலை மாதத்துக்கு மட்டும் தமிழகத்துக்கு சுமார் 41 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், திறக்கப்படும் தண்ணீரின் அளவு 12 டி.எம்.சி ஆக குறைந்துள்ளதால், நாத்து நடும் விவசாயிகள் நடவு செய்யாமல் விட்டு விடலாமா என்ற கவலையில் உள்ளனர். மேலும் குறுவை சாகுபடி செய்ய முடியாத சூழலும் ஏற்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கர்நாடக அரசு ஜூன், ஜூலை மாதத்துக்கு மட்டும் தமிழகத்துக்கு சுமார் 41 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும். அப்படி திறந்தால் தான் விவசாயிகள் தொடர்ந்து நடவு செய்து, குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியும். எனவே தமிழக அரசு, கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு பெற வேண்டிய ஜூன், ஜூலை மாதத்துக்கான காவிரி நீரை முழுமையாகப் பெற உடனடி நடவடிக்கையை மேற்கொண்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.