மாநகராட்சி மேயர் உள்ளிட்டோருக்கு மாதந்தோறும் இனி மதிப்பூதியம்: முதல்வர் ஸ்டாலின்

மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினிடம் உள்ளாட்சி பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின், மதிப்பூதியம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்களின் மக்கள் நலப் பணிகளைச் சிறப்பித்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, மாநகராட்சி மேயர்களுக்கு மாதந்தோறும் ரூ.30,000 மதிப்பூதியம் வழங்கப்படும். துணை மேயர்களுக்கு மாதந்தோறும் ரூ.15,000 மதிப்பூதியம் வழங்கப்படும். மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 மதிப்பூதியம் வழங்கப்படும். அதேபோல, நகராட்சி மன்றத் தலைவர்களுக்கு ரூபாய் 15,000, துணைத் தலைவர்களுக்கு ரூ. 10,000, நகர் மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.5000 மதிப்பூதியமாக வழங்கப்படும். பேரூராட்சி மன்றத் தலைவர்களுக்கு ரூபாய் 10,000, துணைத் தலைவர்களுக்கு ரூ. 5000, பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.2500 மதிப்பூதியமாக வழங்கப்படும். AD இந்த மதிப்பூதியம், முழு நேர மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் வழங்கப்படும். இந்த மதிப்பூதியம் ஜூலை மாதம் முதலே வழங்கப்படும் என்றும் முதல்வர் உத்தரவின்பேரில் அறிவிக்கப்பட்டுள்ளது.