அதிமுக கொடியை நாங்கள் பயன்படுத்துவோம், அதை யாரும் தடுக்க முடியாது: புகழேந்தி

அதிமுக கொடியை நாங்கள் பயன்படுத்துவோம், அதை யாரும் தடுக்க முடியாது என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர் புகழேந்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். காதில் பூ வைத்தபடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த புகழேந்தி கூறியதாவது:-

இத்தனை நாளாக பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் பழனிசாமி பூ சுற்றிக் கொண்டு இருந்தார். நானும் ரொம்ப நாளா வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தேன். உங்களை யார் பொதுச்செயலாளர் என்று சொன்னது.. நீங்களாகவே சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள். பொதுக்குழுவில் காசு கொடுத்து உங்கள் ஆட்களை வைத்து நீங்களாகவே சொல்லிட்டு இருக்கீங்க.. இன்னும் தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெறவில்லை. தேர்தல் ஆணையமும் சொல்லவில்லை. எப்போ பார்த்தாலும் நான் தான் பொதுச்செயலாளர் என சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நீண்ட காலமாக அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமி சொத்து என சொல்லிக்கொண்டு அவரது வீட்டு சொத்து போல இதை கொண்டு போய்ட்டு இருக்காங்க..

வேறு வழியில்ல்லை. எடப்பாடி ஏமாற்றுவதால் ஊடகமும் சேர்ந்து அதிமுக என்றால் பழனிசாமிதான் என்று போய்க் கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலை தொடர்ந்து நடக்கிறதை பார்த்தோம். தேர்தல் ஆணைய வெப்சைட்டில் தெளிவாக உள்ளது. 2018 ல் அனுப்பப்பட்ட ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்பது ஏற்றப்பட்டுள்ளது. அதை அனுப்பியது ஓபிஎஸ்- இபிஎஸ் தான். இது தேர்தல் கமிஷனுக்கு முதலில் போய்விட்டது.

போன பிறகு இவர் ஒரு ரூலை போட்டு அதற்கு பிறகு நாங்கள் திருத்தம் கொண்டு வந்து இருக்கிறோம். அந்த திருத்தத்தில் என்னை பொதுச்செயலாளராக தேர்வு செய்து இருக்கிறார்கள் என எடப்பாடி ஒரு கடிதத்தை அனுப்புகிறார். தேர்தல் ஆணைய வெப்சைட் எதை சொல்லுதோ அவர்கள்தான் அத்தாரிட்டி… மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் ஆணையம் 14 கட்சியை வைத்துள்ளது. 14 கட்சி வெப்சைட்டிலும் போனாலும் சமீபத்திய திருத்தம் தான் இருக்கும். ஆனால், 2018 திருத்தம் உள்ளது. ஏன் இப்படி பழனிசாமி, ஜெயக்குமார் போன்றவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று தெரிந்து கொண்டால், பழனிசாமி பதிவு செய்ததை நாங்கள் எடுத்துக் கொண்டோம். சப்ஜெட் டூ நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது என்று சொல்லியிருக்கிறது. முதலில் ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதிவில் இருப்பதில் எந்த நிபந்தனையும் இல்லை.

அது ஏற்றியது அப்படியே இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆவணங்களை ஏற்கும் போது மட்டும் நீதிமன்ற தீர்ப்பு என்ன வருதோ அதை பொறுத்தத்துதான் நாங்கள் கணக்கில் எடுக்க முடியும். நீங்கள் கொடுத்ததாக ரெக்கார்டில் வைத்துக் கொள்கிறோம் என்றுதான் தேர்தல் ஆணைய செயலாளர் சொல்லியிருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி கிரிமினலாக என்ன செய்து கொண்டார் என்றால் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது.. நாங்கள்தான் எல்லாம். நாங்கள்தான் பொதுச்செயலாளர் என்று என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஓபிஎஸ் கொடியை பயன்படுத்தக்கூடாது என்று சொல்லி பெரும் ரகளை நடந்ததை பார்த்து இருப்பீர்கள். இனிமேல் கொடியை பயன்படுத்தக்கூடாது என்று சொன்னால் பொடிப்பொடியாக்கி விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.