கட்சிகளுக்கிடையே உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க 11 பேர் கொண்ட துணைக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்குழுவில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து மும்பை கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:-
நாட்டின் நன்மைக்காக அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைப்பு கூட்டணி (INDIA) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும். கட்சிகளுக்கிடையே உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க 11 பேர் கொண்ட துணைக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்குழுவில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து மும்பை கூட்டத்தில் முடிவு செய்யப்படும். கூட்டத்திற்கான தேதியை விரைவில் அறிவிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பேசும்போது, என்னுடைய 52 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக இவ்வளவு யாரும் செய்து பார்த்ததில்லை என்றார்.