மணிப்பூரில் 2 குகி பழங்குடியின இளம் பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த பெண்கள் நிர்வாணப்படுத்தி சாலையில் இழுத்து வந்து கும்பல் பலாத்காரம் செய்த நிலையில் அந்த வீடியோவில் இருந்த 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
மணிப்பூரில் கடந்த மே மாதம் தொடக்கத்தில் இருந்து குகி பழங்குடி சமூகத்தினருக்கு எதிராக மெய்தி சமுதாயத்தினர் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மே 4 ஆம் தேதி குகி சமூகத்தினரின் வீட்டை எரித்த மெய்தி சமூகத்தின் உள்ளே இருந்த 2 பெண்களை நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்து வந்து கும்பலாக பலாத்காரம் செய்தனர். இதனை தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரரையும் கொடூரமாக கொன்றனர். 77 நாட்கள் கழித்து இந்த சம்பவத்தில் வீடியோ நேற்று இரவு வெளியாகி சமூக வலைதளத்தையே ஸ்தம்பிக்க வைத்தது. பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், வெளிநாட்டவர்கள் என பலரும் இச்சம்பவத்தை கடுமையாக கண்டித்து பதிவிட்டனர்.
இதுகுறித்து இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக கருத்து தெரிவித்து உள்ள பிரதமர் மோடி, “மணிப்பூர் சம்பவம் வெட்கக்கேடானது; என் இதயம் கோபம் நிரம்பி வலிக்கிறது. எந்த குற்றவாளியும் தப்பிக்கமாட்டார்கள் என உறுதியளிக்கிறேன். சட்டம் முழுவலிமையுடன் தனது கடமையை செய்யும். மணிப்பூர் மகள்களுக்கு நடந்த சம்பவத்தை மன்னிக்க முடியாது.” என்று தெரிவித்து இருந்தார்.
மறுபக்கம் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த முடிவு உள்ளதாக அறிவித்து உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி உள்ளிட்டோர் மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கிற்கு தொடர்புகொண்டு இது விளக்கம் கேட்டு உள்ளனர்.
இந்த நிலையில் இச்சம்பவம் நடந்து 78 நாட்கள் கழித்து குற்றத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை கொண்ட கும்பலில் ஒருவரை கண்டுபிடித்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. மணிப்பூர் மாநில காவல்துறை. அந்த பதைபதைக்க வைக்கும் வீடியோவை பார்த்தவர்களில் முதல் வரிசையில் பெண்ணை பச்சை டீ சர்ட் அணிந்த ஒரு இளைஞர் நிர்வாணமாக இழுத்து செல்வது தெரிந்திருக்கும். அவரைதான் தற்போது கண்டுபிடித்து உள்ளதாக கூறி இருக்கிறது மணிப்பூர் அரசு. 32 வயதான அந்த இளைஞரின் பெயர் ஹுய்ரெம் ஹெரொதாஸ் மெய்தி. மணிப்பூரில் கடந்த மே மாதத்தில் இருந்து குகி இனத்தை சேர்ந்தவர்கள் மீது கோடூர தாக்குதல் நடத்தி பலரை கொண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து சென்ற மெய்தி சமூகத்தை சேர்ந்தவர் இவர்.
சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்ட அந்த பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சியை ஆய்வு செய்த போலீசார், அது ஹுய்ரெம் ஹெரொதாஸ் மெய்தி என்பதை உறுதி செய்து அவரை கைது செய்து இருக்கின்றனர். அவரை தொடர்ந்து தற்போது மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம் கைதானவர்கள் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து உடனே வழக்குப்பதிவு செய்ததாக கூறி மணிப்பூர் போலீஸ், வீடியோ அதிகளவில் பகிரப்பட்ட பிறகுதான் குற்றவாளியை கைது செய்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்து இருக்கின்றன.