என்.எல்.சி. உயிருக்கு சமமான பயிர்களை அழித்தது ஏற்றுக்கொள்ள முடியாது: தமிழிசை

என்.எல்.சி. நிர்வாகம் விளை நிலத்தில் பயிர்களை அழித்தது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. பயிர் உயிருக்கு சமம். அறுவடை காலம் வரை காத்திருந்திருக்கலாம் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காரைக்காலில் நிர்வாக ரீதியான ஆலோசனை கூட்டத்திற்கு செல்லும் வழியில் சிதம்பரம் நட ராஜர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தேன். ஆன்மிகம் இல்லை என்றால் தமிழ் இல்லை. தமிழை வளர்த்தது ஆன்மிகம்தான். என்.எல்.சி. நிர்வாகம் விளை நிலத்தில் பயிர்களை அழித்தது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. பயிர் உயிருக்கு சமம். அறுவடை காலம் வரை காத்திருந்திருக்கலாம். ஆனால், என்.எல்.சி. நிர்வாகம் ஏற்கனவே நிலத்தை கையகப்படுத்தி விட்டோம் என்று கூறுகிறது. இங்கு இடைவெளி எப்படி வந்தது? என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.