ஆளுநர் மாளிகையில் ‘பாரதியார் மண்டபம்’ பெயர் பலகையை திறந்து வைத்தார் திரௌபதி முர்மு!

ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு பாரதியார் மண்டபம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புதிய பெயர் பலகையை திறந்து வைத்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு. பாரதியார் திருவுருவப் படத்தையும் திறந்து வைத்தார்.

ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு, ‘மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அரங்கம்’ என புதிய பெயர் சூட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று, புதிய பெயர் பலகையை திறந்து வைத்துள்ளார். அதற்கான கல்வெட்டையும் திறந்து வைத்துள்ளார். ஆளுநர் மாளிகை அரங்கில் மகாகவி பாரதியாரின் உருவப்படத்தையும் ஜனாதிபதி திரௌபதி முர்மு திறந்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில அமைச்சர்கள், இசை அமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். ஆளுநர் மாளிகையில் உள்ள இந்த அரங்கில் தான், அமைச்சர்கள், தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஜனாதிபதிக்கு இரவு விருந்து அளிக்கிறார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.