இந்த நீட் கொலையின் இரத்தத்தில் நீங்கள் எவ்வளவு நாட்கள் நீந்துவீர்கள் என்று மத்திய அரசை அமைச்சர் டிஆர்பி ராஜா கடுமையாக சாடியுள்ளார்.
சென்னை குரோம்பேட்டை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் இரண்டு முறை நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் மன உளைச்சலில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழலில் மகன் உயிரிழந்த சோகத்தில் தந்தை செல்வ சேகர் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .
இந்நிலையில் அமைச்சர் டிஆர்பி ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
மேலும் மேலும் நீட் தற்”கொலை”கள்!
ஆளுநர் அவர்களே நீங்கள் எப்படி உறங்குவீர்கள்? உங்களுக்கு மனிதாபிமானம் என்றால் என்னவென்றே தெரியாதா?
இந்த #நீட்_கொலைகள் உங்களது கல் நெஞ்சத்தை கொஞ்சமும் அடைக்கவில்லையா?
இனியாவது உங்களது ஆணவக் குரலை அடக்குவீர்களா ?
அல்லது எங்கள் மக்கள் இப்படி மாண்டு போகவேண்டும் என்பதுதான் உங்கள் நோக்கமா !?!
இந்த நீட் கொலையின் இரத்தத்தில் நீங்கள் எவ்வளவு நாட்கள் நீந்துவீர்கள்…
உங்கள் ஓய்வு காலத்தில் மீளும் நினைவுகளில் இந்த அப்பாவிகள் முகம் நிச்சயம் வரும். உறக்கத்தை வதைக்கும். அப்போதாவது, மனசாட்சி என ஒன்று இருந்தால் விழிக்கட்டும். மனதார மன்னிப்பு கோரட்டும்.
கோருவீர்களா ??????
இந்தப் பலிகளுக்கு காரணமான உங்கள் ஆணவத்தை புதைப்பீர்களா?
ஆளுநராக இருப்பது பெரிதல்ல. மனிதனாக இருங்கள்.
நமது மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு துணை நில்லுங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.