தென்ஆப்பிரிக்காவில் 15-வது பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நாளை தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு செல்கிறார்.
தென்ஆப்பிரிக்காவில் 15-வது பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு செல்கிறார். அங்கு அவர் தென்ஆப்பிரிக்கா, சீனா, பிரேசில் நாட்டு தலைவர்களுடன் சந்தித்து பேசுகிறார். அவர் மாநாட்டில் முக்கிய உரையாற்றவும் உள்ளார்.
கடந்த ஆண்டு பாலியில் நடந்த கூட்டத்தில் சீன அதிபரை சந்தித்த பிறகு நாளைதான் முதல் முதலாக அவரை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். அப்போது இரு தரப்பு உறவுகள் பற்றி விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தீவிரவாதத்தை ஒடுக்குவதை பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.