பாமக இல்லன்னா மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்திருக்க முடியுமா?: அன்புமணி

நாங்கள் இல்லை என்றால் கருணாநிதியை அடக்கம் செய்வதற்கு மெரினாவில் இடமே கிடைத்திருக்காது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாமகவின் 35 ஆம் ஆண்டு தொடக்க விழாவை நடத்த தமிழக அரசு தடை விதித்தது கண்டனத்துக்குரியது. எங்களை வன்முறை கட்சி என்கிறார்கள். நாங்கள் பேச ஆரம்பித்தால் தாங்க மாட்டார்கள். கடந்த 35 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். 108 ஆம்புலன்ஸ், கிராம சுகாதாரத் திட்டம், ரயில்வே திட்டம் உள்ளிட்டவை அமலாக பாமகதான் காரணம். இவ்வளவு ஏன் நாங்கள் இல்லை என்றால் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்திருக்க முடியாது. நாங்கள் போட்ட வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால் மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்திருக்க முடியாது. பாமக தயவால்தான் 2006 ஆம் ஆண்டு 96 எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு 5 ஆண்டுகள் ஆட்சியில் திமுக அமர்ந்தது. இதனை திமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும். என்எல்சிக்காக பாமக தொடர்ந்து பொதுமக்களுக்காக பாடுபட்டு வரும். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக திமுக செய்த வன்முறை சம்பவங்கள் போன்ற பல சம்பவங்களை எங்களாலும் சொல்ல முடியும். இவ்வாறு அன்புமணி கூறினார்.