மீண்டும் வென்றால், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.3 ஆயிரமாக உயரும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி கூறினார்.
சமீபத்தில், வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் ரூ.200-ஐ மத்திய அரசு குறைத்தது. இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலம் துப்குரி சட்டப்பேரவை தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலையொட்டி ஜல்பைகுரி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி பேசினார்.
அப்போது அவர், ‘அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் யாரும் பா.ஜனதாவுக்கு ஒரு ஓட்டுகூட போடக்கூடாது. அந்தக் கட்சி மீண்டும் வென்றால், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.3 ஆயிரமாக உயரும். அதேநேரம் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கிறோம்’ என்று கூறினார்.