இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு!

நடப்பு ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற அனைத்து துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டு தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று, நடப்பு ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், நடப்பு ஆண்டில் இயற்பியல் துறையில் சாதித்த 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பியரி அகோஸ்டினி, பெரென்க் க்ரவுஸ், ஆனி ஹூலியர் ஆகிய 3 பேருக்கு நடப்பு ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரான் மற்றும் ஆற்றலை விரைவாக செயல்முறைப்படுத்தும் அளவீடுகளை பயன்படுத்துவதற்கான கருவிகளை கண்டறிந்ததால் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அணுக்களில் உள்ள மூலக்கூறுகள் மற்றும் எலக்ட்ரான்களை ஆய்வு செய்வதற்காக புதிய கருவியை இவர்கள் 3 பேரும் சேர்ந்து கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அணுக்களில் மூலக்கூறுகளுக்கு இடையே இருக்கும் எலக்ட்ரான்களை ஆய்வு செய்வதன் மூலம் புதுவிதமான ஒரு ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். இது அறிவியல் உலகத்திற்கும், வருங்கால தொழில்நுட்பத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். குவாண்டம் மெக்கானிக் என்பது போன்ற விஷயங்களுக்கு இது பயன்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த கருவியில் இவர்கள் 3 பேரின் பங்களிப்பும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக எலக்ட்ரான்களுக்கு இடையில் ஏற்படும் திசைவேக மாற்றம் மற்றும் ஆட்டோசெகண்ட் எனப்படுகின்ற ஹார்ட்பீட் மற்றும் ஏஜ் ஆப் யுனிவர்ஸ் போன்றவற்றை இதன் மூலம் கண்டறிய முடியும். அதாவது பேரண்டத்தில் உள்ள ஒவ்வொரு அணுவில் உள்ள மாற்றங்களையும் இந்த கருவியின் மூலம் கண்டறிய முடியும் என்று கூறப்படுகிறது. எனவே இது விண்வெளி துறையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.