பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக களமிறங்கும் தாலிபான்!

இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே போர் மூண்டிருக்கும் நிலையில், பாலஸ்தீனுக்காக ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான் அமைப்பு முன்வந்து இருப்பதாக அறிவித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலஸ்தீனின் காசா, மேற்கு கரை ஆகிய பகுதிகளை அண்டை நாடான இஸ்ரேல் ஆக்கிரமிக்க அந்நாட்டின் மீது பல ஆண்டுகளாக தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேல் படையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட காசாவுக்குள் நுழைந்து தாக்கியதாகவும், ஜெருசலேமில் உள்ள இஸ்லாமியர்கள் புனித தலமான அக்சா மசூதிக்கு செல்ல முயன்றவர்களை அடித்து விரட்டியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் ராணுவம் பல ஆண்டுகளாக பாலஸ்தீன் பகுதிகளில் நடத்தி வரும் ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக லட்சக்கணக்கான பாலஸ்தீன் மக்கள், பெண்கள், குழந்தைகள் கொன்று குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். ரம்ஜான், பக்ரீத் ஆகிய பண்டிகை காலங்களில் புனித அக்சா மசூதிக்கு தொழுகை நடத்த செல்லும் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் போலீஸ், ராணுவத்தை ஏவி தாக்குதல் நடத்துவதும் வழக்கம்.

இந்த நிலையில், இஸ்லாமியர்கள் அக்சா மசூதியில் தொழுகை நடத்த இஸ்ரேல் தடை விதித்து உள்ளதால் அங்கு தொடர்ந்து பதற்றமான நிலை அதிகரித்துக்கொண்டே சென்றது. இதற்கிடையே ஜோர்டான் வெளியுறவுத் துறை அமைச்சர் கடந்த வாரம் அல் அக்சா மசூதிக்கு சென்றபோது இஸ்ரேலிய மக்கள் மற்றும் போலீஸ் படைகள் காலணிகளுடன் நுழைந்ததாக கூறப்படுகிறது. அதேபோல், இஸ்லாமிய தலைவர்களின் கல்லரைகளை அங்கு உள்ள படைகள் சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பாலஸ்தீன், ஜோர்டான ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில்தான் திடீரென நேற்று இஸ்ரேலை நோக்கி பாலஸ்தீனிலிருந்து ஹமாஸின் ராக்கெட்டுகள் பாய்ந்து உள்ளன.

இஸ்ரேலின் ராணுவ மையங்கள், ஆயுத கிடங்குகள், விமான நிலையங்களை நோக்கி பாலஸ்தீனின் காசா பகுதியிலிருந்து 5000 க்கும் அதிகமான ஏவுகணைகள் பாய்ந்தன. இந்த தாக்குதலுக்கு பாலஸ்தீனில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது. ஆபரேசன் அல் அக்சா பிலட் என்ற பெயரில் ஹமாஸ் நடத்திய இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலும் போர் பிரகடனத்தை அறிவித்தது. அத்துடன் நேற்று இரவே இஸ்ரேல், பாலஸ்தீனை நோக்கி ஏவுகணை ஏவி இருக்கிறது. இந்த போர் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான் அமைப்பு பாலஸ்தானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் முன்வந்து இருப்பதாக அறிவித்து உள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் மக்கள் தொடர்புத் துறை டுவிட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, “புனித பூமியை நோக்கி செல்ல தங்கள் நாடுகளின் எல்லைகளை திறக்குமாறு அப்கானிஸ்தான் அரசின் வெளியுறவுத் துறை ஈரான், ஈராக், ஜோர்டான் நாடுகளிடம் கோரிக்கை விடுத்தது. எங்கள் அண்டை நாடுகளிடம் இருந்து நல்ல செய்தி வரும் என காத்திருக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.