இஸ்ரேல் போரை தொடங்கவில்லை என்றபோதும் முடித்து வைக்கும் என அந்நாட்டு பிரதமர் நேதன்யாகு எச்சரிக்கை விடும் வகையில் பேசியுள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் முன்னறிவிப்பு எதுவுமின்றி கடந்த சனிக்கிழமை திடீரென தாக்குதல் தொடுத்தது. ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவியது. இந்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்துள்ள பேட்டியில், இந்த போர், தாக்குதல் வெறும் தொடக்கம்தான். நாங்கள் இப்போதுதான் தாக்கவே தொடங்கி இருக்கிறோம். இனி எங்கள் தாக்குதல் இன்னும் மோசமாக இருக்கும். நாங்கள் இன்னும் வலிமையாக தாக்க போகிறோம். இப்போதுதான் ஹமாஸை தாக்க தொடங்கி உள்ளோம், இனிமேல்தான் எங்களின் பலம் முழுமையாக ஹமாஸுக்கு தெரியும். இனி வரக்கூடிய பல தலைமுறைகளுக்கு புரிய வைக்க போகிறோம். நாங்கள் செய்யப்போகும் சம்பவங்களின் விளைவுகள் இனி வரக்கூடிய பல தலைமுறைகளுக்கு எதிரொலிக்கும் . அந்த அளவிற்கு இருக்க போகிறது. பல தலைமுறைகளுக்கு அவர்கள் இந்த தாக்குதலை உணருவார்கள். எங்கள் நாட்டு மக்களை அவர்கள் சீண்டிவிட்டார்கள். இதற்கான பதிலடியை கொடுப்போம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 2,300 இஸ்ரேல் மக்கள் காயமடைந்து உள்ளனர். இதற்கு ஹமாஸ் பயங்கரவாதிகள் விலை கொடுப்பார்கள் என்றும் அதனை நீண்ட காலத்திற்கு அவர்கள் நினைவில் கொள்வார்கள் என்றும் நேதன்யாகு கூறியுள்ளார்.
அவரின் இந்த பேச்சு காரணமாக எங்கே இந்த போர் அணு ஆயுத போராக உருவெடுக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது பல தலைமுறைகளுக்கு உணரும் வகையில் தாக்குதல் நடத்த போகிறோம் என்று அவர் கூறியுள்ளார். அணு ஆயுத போரில் மட்டுமே இது சாத்தியம். ஹமாஸ் படையை மொத்தமாக அழிக்கும் விதமாக, பாலஸ்தீனத்தை மொத்தமாக கைப்பற்றும் விதமாக அவர் இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மொத்தமாக ஹமாஸை தீர்த்து கட்டும் விதமாக அவர் அணு குண்டு போடும் திட்டத்தில் உள்ளாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனால்தான் பல தலைமறைமுகள் பாதிக்கும் தாக்க போகிறேன் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது சர்வதேச அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.