ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் நவம்பர் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்தபோது திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் ரூ.300 கோடியை தவறாகக் கையாண்டு ஊழல் செய்ததாக மாநில ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்து அவரை அண்மையில் கைது செய்து, நீதிமன்றக் காவலில் ராஜமகேந்திரவரம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஏற்கனவே மூன்று முறை அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில், நான்காவது முறையாக நவம்பர் 1-ஆம் தேதி வரை நீட்டித்து, விஜயவாடா ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது.