ஐ .நா. பொதுச்செயலாளர் ராஜினாமா செய்ய வேண்டும்: இஸ்ரேல்

ஐ.நா. பொதுச்செயலாளர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று இஸ்ரேல் கோரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்த 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய 18-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

காசா மீதான தனது தாக்குதலை இஸ்ரேல் நிறுத்திக்கொள்ள வேண்டும். காரணம் இல்லாமல் ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தவில்லை என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அதன் பொதுச்செயலாளர் அன் டோனியோ குட்டரெஸ் கூறியிருந்தார்.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கருத்துகளுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இஸ்ரேல் வெளியுறவு மந்திரி இலய் கோஹன் மற்றும் ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் இர்டான் வலியுறுத்தியுள்ளனர்.