டெல்லி கலால் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங்கின் ஜாமீன் மீதான விசாரணை நவம்பர் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
டெல்லி கலால் ஊழலுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி தலைவா் சஞ்சய் சிங், ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனுத் தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் கோரும் மனு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் பதிவுத் துறையிடம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை நவம்பர் 28-ம் தேதிக்கு டெல்லி நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
இதற்கிடையில், சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால், சஞ்சய் சிங்கின் நீதிமன்றக் காவலை டிசம்பர் 4 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.