கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. அந்த திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். விசாரணைக்கே ஏற்க மறுத்த நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்நாடு அரசு கடனில் உள்ளது. அப்படி இருக்க இந்த திட்டத்தை நிறைவேற்ற கூடாது. கடன் சுமை அதிகம் உள்ள போது இப்படி பணம் கொடுக்க கூடாது என்று அவர் மனுவில் கூறி இருந்தார். அந்த மனு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.. மனுவை விசாரிக்க முடியாது என்று கூறி நீதிபதி பி.ஆர்.கவாய் மனுவை தள்ளுபடி செய்தார்.