மத்திய அரசின் புலனாய்வு அமைப்பின் இடைத்தரகர்கள் என்னையும் மிரட்டினார்கள் என சபாநாயகர் அப்பாவு அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளார். ரூபாய் 20 லட்சம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரி கைதான நிலையில் சபாநாயகரின் குற்றச்சாட்டு அரசியலில் கடும் அதிர்வலையில் ஏற்படுத்தி உள்ளது.
சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சபாநாயகர் அப்பாவு என்னிடத்திலும் கடந்த மூன்று மாதங்களாக ஒரு சிலர் பேசிக் கொண்டே இருந்தார்கள். நான் அதை காது கொடுத்து கேட்கவே இல்லை. ஒரு முறைக்கு இரண்டு முறை வரும்போது தம்பி என்னிடம் இந்த வேலை வேண்டாம் என்று சொன்னேன். நான் சரியாக இருக்கிறேன், எனக்கு மேலே உள்ளவர் பார்த்துக் கொள்வார். என்ன வந்தாலும் நான் பார்த்துக் கொள்வேன். ஏனென்றால் நான் விவசாயம் மட்டும் தான் செய்கிறேன். வேற வேறு தொழில் ஏதும் செய்யவில்லை என்னிடமே மிரட்டினால் இதைத்தானே மற்ற எல்லாரிடமும் செய்வீர்கள் என்று சொன்னேன்.
இதையடுத்து அப்படி பேசியவர்கள் வருமான வரித்துறையினரா அமலாக்கத் துறையினரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர்கள் இடைத்தார்கள். நான் அவர்களிடம் காது கொடுத்து என்ன விஷயம் யார் என்று கேட்கவே இல்லை என்றார். கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து இதுபோன்று பேசுகிறார்கள். இதுதான் நாடு முழுவதும் நடக்கிறது. தமிழகத்தில் முதல்வரின் ஆட்சியில் நமது காவல்துறை சிறப்பாக பணியாற்றி வருகிறது. இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை சரியான நபரை கைது செய்துள்ளது. தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
மத்திய அரசு உங்களிடம் ஏதாவது பிரச்சனை செய்ய சொல்கிறது என்று வருபவர்கள் மிரட்டுகிறார்கள் என அப்பாவு வெளிப்படையாக தெரிவித்துள்ளது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முடிந்தால் நீங்கள் ஊரைவிட்டு கொஞ்ச நாள் சென்று விடுங்கள் என்றும் மிரட்டினார்கள் மேலும் உங்கள் மொபைல் எண்ணை மாற்றி விடுங்கள்.. இப்படி எல்லாம் மிரட்டினார்கள் என அப்பாவு தெரிவித்துள்ளார்.