தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 சிறைவாசிகள் விடுதலை கோப்புகள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் என பிப்ரவரி 2-ந் தேதிக்குள் தமிழ்நாடு ஆளுநர் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை சிக்கந்தர் உட்பட 3 சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. இது தொடர்பான கோப்பு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அரசால் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோப்பு மீது தமிழ்நாடு ஆளுநர் ரவி எந்த முடிவெடுக்கப்படவில்லை. ஏற்கனவே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த நிலையில் இன்று 3 சிறைவாசிகள் விடுதலை கோப்பு விவகாரத்தை தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பெஞ்ச் முன்பாக எழுப்பியது. அப்போது, 3 சிறைவாசிகள் விடுதலை கோப்புகள் ஏன் நிலுவையில் உள்ளன? எப்போதுதான் ஆளுநர் முடிவெடுப்பார்? 3 சிறைவாசிகள் விடுதலை கோப்பு விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பிப்ரவர் 2-ந் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் அதிரடியாக உத்தரவிட்டது.