முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 140 அடியை எட்டியதால், இன்று வியாழக்கிழமை முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இன்று வியாழக்கிழமை நிலவரப்படி, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.25 அடியாக இருந்த நிலையில், அணைக்குள் நீர்வரத்து அதிகரித்தது. அதன் காரணமாக சுமார் 12 மணியளவில் அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியது. ரூல் கர்வ் அட்டவணைப்படி 140 அடியை எட்டும் போது அணையின் கீழ்புறப்பகுதியில் கரையோரத்தில் வசிக்கும் கேரள மக்களுக்கு தமிழக பொதுப்பணித்துறையினர் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடவேண்டும்.
அதனடிப்படையில் இன்று அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை அறிவித்துள்ளனர்.