வருமானவரி, அமலாக்கத்துறை அலுவலகங்களுக்கு பூட்டு போட்டு தர்ணாவில் ஈடுபடுவேன்: வீரலட்சுமி!

3 ஆயிரம் கோடி ரூபாய் வரை சொத்துக்களை சேர்த்த மாலினி ஜெயச்சந்திரன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வரிமானவரி மற்றும் அமலாக்கத்துறை அலுவலகங்களை பூட்டபோவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழர் முன்னேற்ற படையின் வீரலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வீரலட்சுமி வெளியிட்டுள்ள வீடியொ பதிவில் கூறியுள்ளதாவது:-

பாஜகவின் மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன் அவர்கள் ஜல்லி கற்களை விற்பனை செய்து வந்தார்கள். ஆனால் அதற்கு பிறகு 3 ஆயிரம் கோடி சொத்து மாலினிக்கு எப்படி வந்தது. அந்த பணமெல்லாம் எவன் அப்பன் வீட்டு பணம்; உங்கள் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ கண்டுபிடிக்காத 3 ஆயிரம் கோடி சொத்தை நாங்கள் கண்டுபிடித்து 1500 கோடி சொத்து மதிப்புள்ள ஆவணங்களை வருமானவரித்துறையிடம் புகார் அளித்துள்ளேன்.

மத்திய நிதியமைச்சரான நீங்க, பணப்பதுக்கலில் ஈடுபட்டவர்கள் குறித்து புகார் அளித்த இந்த வீரலட்சுமியை அழைச்சி பாராட்டாமல், வெகுமதி அளிக்காமல், பண மோசடி செய்தவர்களை அழைத்து பாராட்ட என்ன காரணம். 1500 கோடி நான் கண்டுபிடித்து கொடுத்த பணம் பாஜகவினரின் அப்பன் வீட்டு பணமா?; மத்திய நிதியமைச்சரான நீங்க முறை தவறி, நெறி தவறி நடக்கலாமா? இதுதான் கருப்பு பணத்தை ஒழிக்கும் லட்சமணமா? நான் கண்டுபிடித்து தந்த பணம் எவன் அப்பன் வீட்டு பணம் என்பது தெரிய வர வேண்டும். அப்படி இல்லை என்றால் வருமான வரித்துறை ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது என்று சென்னையில் உள்ள வருமானவரி, அமலாக்கத்துறை அலுவலகங்களுக்கு பூட்டு போட்டு தர்ணாவில் ஈடுபடுவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.