அண்ணா திமுக கோஷ்டிகளை தம்மால் நிச்சயம் ஒன்று சேர்க்க முடியும்: சசிகலா

அண்ணா திமுக கோஷ்டிகளை தம்மால் நிச்சயம் ஒன்று சேர்க்க முடியும் என சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர்.நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை எம்ஜிஆர் நினைவிடத்தில் சசிகலா தமது ஆதரவாளர்களுடன் இன்று நினைவஞ்சலி செலுத்தினார். மேலும் எம்ஜிஆர் நினைவிடத்தில் சசிகலாவும் அவரது ஆதரவாளர்களும் உறுதி மொழி எடுத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் சசிகலா பேசியதாவது:-

அதிமுக தொண்டர்களை அணிகளை ஒருங்கிணைப்பது எனது முதல் பணி என சொல்லி இருந்தேன். இப்பவும் அதையேதான் சொல்கிறேன். நிச்சயமாக பாருங்க. அதிமுக அணிகளை ஒன்றிணைக்க முடியும் என்கிற நம்பிக்கை இருக்கு.. இருக்கு.. நான் இல்லைன்னு சொல்லலை.. இருக்கு.. அதாவது ஒன்னு வெச்சுக்குங்க.. தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றுகிற கடமை எங்களுக்கு இருக்கு. இப்ப நீங்க பார்த்தீங்கன்னா இந்த திமுக அரசாங்கம் தொடர்ந்து இருந்துச்சுன்னா, இந்த திமுக ஆட்சி தொடர்ந்து இருந்துச்சுன்னா அதாவது இலங்கை கதைதான் (பொருளாதார நெருக்கடி) இங்க வரும். அதை மக்களும் புரிஞ்சுக்குவாங்க.. புரிஞ்சுகிட்டாங்க.. ஏன்னா அவங்க சொன்ன எதனையும் செய்யவே இல்லை. ஒரு தெளிவே இல்லாமல் இருக்கிறது இந்த அரசாங்கம். நான் நேற்று கூட சொன்னேன்.. அவங்களுக்கு தெளிவு இல்லைன்னு.. இஷ்டத்துக்கு பேசறாங்க.. வாக்களித்த மக்களை வஞ்சிக்காதீங்க..

அதிமுகவில் கோஷ்டிகளுக்கு இடையே பிளவு அதிகமாக இருக்கிறது என்றாலும் அனைவரையும் ஒன்று சேர்க்க முடியும். அதாவது நான் சொல்றேங்க ஒன்னாக்க முடியும். 200 யூனிட்டுக்கு மேல போனா ஒவ்வொரு ஆண்டும் 10% 1 யூனிட்டுக்கு விலை ஏற்றப்பட்டும் என கொடுத்துருக்காங்க.. 2027 வரை கடைபிடிக்கப்படும் என சொல்லிருக்காங்க.. 200 யூனிட் முதல் 400 யூனிட் வரை உபயோகிக்கும் மக்களுக்கு 1 யூனிட்டுக்கு ரூ1.50 பைசா ஏறுது. இதே மாதிரி 1,000 யூனிட் வரை கொண்டு போயிருக்காங்க.. 10% கூடுதல் மின் கட்டணம் உயருகிறது.. இதை எல்லாம் அரசாங்கம் யோசிக்கனும்.. அதுவும் இந்த மாதிரி கஷ்டப்படுற நேரத்துல மக்கள் கிட்ட இருந்தே பணத்தை வாங்குறதிலேயே குறியா இருந்தாங்கன்னா என்னா? இவ்வாறு சசிகலா கூறினார்.